பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி ஜோதிட விதிகள்

புதன், 24 ஜனவரி, 2018


அறிமுகம் 
சப்தரிஷி நாடி ஜோதிடம் 

தலைப்பு:
நாடி ஜோதிட பலன்களின் பரிணாமங்கள் 

தலைப்பு:
பிருகு நந்தி நாடி ஜோதிட பலன்களின் பரிணாமம் சப்தரிஷி நாடி ஜோதிடம் 

பிருகு நாடி ஜோதிடம் vs சப்தரிஷி நாடி ஜோதிடம்:
பிருகு நாடி ஜோதிடம்
பிருகு நாடி ஜோதிடம் ஒரு ஆய்வுக்கு உரிய " குறிப்பிட்ட காரக கிரகம் தான் சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்கள் அடிப்படையில் பலன்களை  தரும் " என்ற ஜோதிட ரீதியான கோட்பாட்டின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றது.

சப்தரிஷி நாடி ஜோதிடம் 
ஒரு ஆய்வுக்கு உரிய " குறிப்பிட்ட காரக கிரகம் தான் சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்கள் வகையில் 70% பலனும் மேலும் சேர்கை பெரும் கிரகங்களின் ஆதிபத்யங்களின் காரகதுவங்கள் வகையில் 30% பலன்களையும்  தரும் " என்ற ஜோதிட ரீதியான கோட்பாட்டின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றது.

பிருகு நாடி ஜோதிட பரிணாமம் சப்தரிஷி நாடி ஜோதிடம்:
ஜோதிட( துறை )த்தில் அன்று முதல் இன்று வரை தொன்று தொட்டே பரிணாமங்கள் இருந்தது, இன்று கேபி அட்வான்ஸ் ஜோதிடம் வரை ஜோதிடம் நடைமுறை துல்லிய பலன்கள் வகையில் பரிணாமம் பெற்றுள்ளது. அவ்வகையில் பிருகு நந்தி நாடியின் துல்லிய பலனுக்கான பரிணாமம் சப்திரிஷி நாடி ஜோதிடம் ஆகும். அதாவது நாடி ஜோதிடத்தில் துல்லிய பலனுக்கான பரிணாம வளர்ச்சி சப்திரிஷி நாடி ஜோதிடம் ஆகும்.

ஆர்ஜி ராவ் நாடி ஜோதிடம்:
கடந்த 20 ஆம் நுற்றாண்டில் ஜோதிடத் துறை மாபெரும் வளர்ச்சி கண்டது. பிருகு நாடி சப்தரிஷி நாடி ஜோதிடங்களின் பரிணாமங்கள் வகையில் காலம் சென்ற நாடி ஜோதிட மாமேதை ஐயா ஆர்ஜி ராவ் அவர்களின் " ஆர்ஜி ராவ் நாடி " ஜோதிடம் வகையில்.

கேபி ஜோதிடம்:
கடந்த 20 ஆம் நுற்றாண்டில் பாரம்பரியம் அ பராசாரர் எனப்படும் வேத ஜோதிடம் வகையில் அதாவது ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர நாதன் வேலையை முதன்மையாக செய்யும் 70% அதாவது சாரம் என்றளவில் இருந்த வேத ஜோதிடம் உப சாரம் அ உப நட்சத்திரம் அ உப நட்சதிராதிபதி என்றும்,உப நட்சதிராதிபதி, உப உப நட்சதிராதிபதி, உப உப உப நட்சதிராதிபதி எனவும், காலம் சென்ற ஜோதிட மாமேதை ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களால் " கிருஷ்ணமூர்த்தி பத்ததி " என்ற ஜோதிட முறையில் வேத ஜோதிடம் பரிணாமம் கண்டது. சாரம் உப சாரம் என்று பரிணாமம் கண்டது.

" பிருகு சம்ஹிதை " பிறகு " வராஹி பிருகு சம்ஹிதை "
வேத ஜோதிடம் பிருகு பராசாரர் போன்ற முனிவர்களால் அடிப்படை வேத ஜோதிடங்களும்  பிறகு வானியல் மாற்றங்களின் உண்மையை மேலும் ஆராய்ந்த வானியல் நிபுணர் முன்னாள்நலந்தா பலகலைகழக மாணவன் வராஹமித்திரர் போன்றோரின் ஆய்வால் மேலும் லக்னம் போன்ற கண்டுபிடிப்பால் அடிப்படை வேதஜோதிடம் அ பராசாரர் ஜோதிடம் என்றழைக்க்கப்படும் பாரம்பரியம் ஜோதிடம் நாடி ஜோதிடங்கள் போன்றவைகள் மேலும் துல்லிய நடைமுறை பலன்கள் வகையில் பரிணாமம் பெற்றது.

நாடி ஜோதிட லக்னங்கள்:

பிருகு நாடி ஜோதிடம் 
பிருகு நாடி ஜோதிடம் காலபுருஷ தத்துவ ராசியான மேஷ ராசியையே முதன்மை லக்னமாக கொண்டு ஜோதிட பலன்கள் கணிக்கப்படுகின்றது.

சப்தரிஷி நாடி ஜோதிடம் 
சப்தரிஷி நாடி ஜோதிடம் ஜெனன கால பிறப்பு லக்னத்தை மையமாக கொண்டு ஜோதிட பலன்கள் கணிக்கபடுகின்றது.

பலன்கள் துள்ளியப்படுதல்:
ஜெனன கால பிறப்பு லக்னம் கொண்டும் சேர்கை பெரும் கிரகங்களின் காரகதுவங்களை கொண்டும் மேலும் சேர்கை பெரும் கிரகங்களின் ஆதிபத்யங்களின் காரகதுவங்களை கொண்டும் பலன்கள் கணிக்கப்படும் பொழுது பலன்கள் நடைமுறையில் மேலும் துல்லியம் பெறுகிறது பிருகு நாடி ஜோதிடத்தின் பரிணாமமான சப்தரிஷி நாடி ஜோதிடம் வகையில்.

ஷேர் செய்யவும் அனைவருக்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.

பாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன்
சி,காளிதாஸ்.

பதிவுகள் தம்மை வந்தடைய follow அ email முறையில் subscription செய்யவும்.
கமெண்ட்ஸ் செய்யவும் பதில்கள் தரப்படும்.